ருவான்வெலிசயாவில் அதிஷ்டான பூஜையுடன் பாதயாத்திரை நிறைவு

5வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் கெப்டன் பி.எ.டி சமன் தேவபிரிய யூஎஸ்பீ அவர்கள் 78 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மத பக்தியை கௌரவிக்கும் வகையில் 2026 பெப்ரவரி 05 அன்று பாதயாத்திரை மேற்கொண்டார்.

இப்பாதயாத்திரை ஹபரண, 5வது இலங்கை இராணுவ மருத்துவப் படையணியில் இருந்து அனுராதபுர புனித ஸ்ரீ ஜய ஸ்ரீ மஹா போதி வரையில் மேற்கொற்கொள்ளப்பட்டது.

அவர் 1972 ஜனவரி 24 அன்று பிறந்தார். தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை நிறைவு செய்த பின்னர் 1996 மே 08 அன்று இலங்கை இராணுவ மருத்துவப் படையணியில் ஒரு ஆட்சேர்ப்பு வீரராக இணைந்தார். அனுராதபுர இராணுவ தாதியர் பாடசாலையில் தனது தொழிற்துறை பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் நாடு முழுவதும் உள்ள பல இராணுவ நிறுவனங்களில் ஒரு செவிலியர் அதிகாரியாக அர்ப்பணிப்புடன் சேவை செய்தார். 31 வருட கெளரவமான மற்றும் முன்மாதிரியான இராணுவ வாழ்க்கையை முடித்த அவர், 2027 ஜனவரி 03 அன்று 55 வயதில் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

நாட்டின் இறையாண்மைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துதல், அங்கவீனமுற்ற போர்வீரர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கல், "தித்வா" சூறாவளியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் மற்றும் இடம்பெற்ற இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆசீர்வாதங்களையும் நல்லெண்ணத்தையும் வழங்குவது ஆகிய நோக்கங்களுடன் இந்தப் புனிதப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த முயற்சியின் நிறைவைக் குறிக்கும் வகையில், புனித ருவன்வெலிசயத்தில் அதிஷ்டான பூஜை (உறுதிமொழி விழா) நடத்தப்பட்டதோடு யாத்திரை நிறைவடைந்தது.