பனாகொடையில் நடைபெற்ற படையணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் இராணுவத் தளபதி கலந்து சிறப்பித்தல்

படையணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி 2026 ஜனவரி 31 அன்று பனாகொடை ரக்பி மைதானத்தில் நடத்தப்பட்டது.

இந் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

வருகை தந்த இராணுவ தளபதியை பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, காலாட் பணிப்பக பணிப்பாளர் நாயகமும் இராணுவ கால்பந்து குழு தலைவருமான கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்தின ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் விளையாட்டு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் கே.ஏ.டி.சீ.ஆர். கன்னங்கர ஆர்எஸ்பீ என்டிசீ ஆகியோர் வரவேற்றனர்.

படையணிகளுக்கிடையிலான நடைபெற்ற இப் போட்டிகளில் பதினேழு படையணிகள் போட்டியிட்டதுடன் இராணுவ புலனாய்வு படையணி மற்றும் இலங்கை இராணுவ பொது சேவை படையணிக்கு இடையிலான இறுதி போட்டி ஆரவாரங்கள் மற்றும் கைதட்டல்களுக்கு மத்தியில் தொடங்கியது.

போட்டியின் போது, இலங்கை இராணுவ பொது சேவை படையணி சாம்பியன்களாக பட்டத்தை வென்றதுடன் அதே நேரத்தில் இராணுவ புலனாய்வு படையணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அதன் பின்னர் இராணுவத் தளபதி, சிறந்த கோல்கீப்பராக இலங்கை இராணுவ பொது சேவை படையணி லான்ஸ் கோப்ரல் சி.டி.ஐ. பெர்னாண்டோ, அதிக கோல் அடித்த வீரராக இலங்கை இராணுவ பொது சேவை படையணி லான்ஸ் கோப்ரல் என்.எம். அப்லால் மற்றும் சிறந்த வீரராக இலங்கை இராணுவ பொது சேவை படையணி இன் சிப்பாய் ஏ.டி.சி. பயாஸ் ஆகியோருக்கு கோடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.