2nd February 2026
553 வது காலாட் பிரிகேடின் 6 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 14 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை பாராட்டி, கிளிநொச்சி மாவட்ட செயலகம் 2026 ஜனவரி 29 ஆம் திகதி 553 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தில் ஒரு சிறப்பு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்து அவர்களை கௌரவித்தது.
இந்நிகழ்வின் போது, சீரற்ற காலநிலையின் போது மீட்பு, நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு பணிகளில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு மாவட்ட செயலாளர் திரு. முரளிதரன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.