11th February 2026
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் கே.பீ. அருண ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போர்வீரர் முன்முயற்சித் திட்டம் குறித்த முதற்கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி, பாதுகாப்பு அமைச்சு, தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சுடன் இணைந்து 2026 பெப்ரவரி 11 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடாத்தியது.
இந்த நிகழ்ச்சித்திட்டம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.ஜி.எல்.கே. வீரகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் ஒருங்கிணைப்பில் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ். ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.
எதிர்காலத்தில் ஓய்வு பெறவிருக்கும் இராணுவ வீரர்களுக்கு ஆதரவளிப்பதும், தேசிய பொருளாதாரத்தில் அவர்களை ஒருங்கிணைப்பதை எளிதாக்குவதும், அவர்களின் தொழில்முனைவோர் திறன்களை மேம்படுத்துவதும் இந்த அமர்வின் நோக்கமாக காணப்பட்டது.
ஏற்றுமதி கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகமும் (தொழில்முனைவோர் மேம்பாடு) பணிப்பாளருமான திரு. எரந்திக்க திசாநாயக்க அவர்கள் சிறு தொழில்கள் மேம்பாட்டுப் பிரிவின் பயிற்சி அதிகாரி திரு. தனுக அபேதுங்க அவர்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்தினார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சு மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.