27th February 2026
இராணுவப் புலனாய்வுப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வெலிகம பொலிசாருடன் இணைந்து மாத்தறை மாவட்டத்தின் வெலிப்பிட்டி பிரதேச செயலகப் பகுதியில் 2026 பெப்ரவரி 24 அன்று கூட்டுச் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது, 136 கிலோகிராம் வல்லப்பட்டை மற்றும் வல்லப்பட்டை எண்ணெய் பிரித்தெடுக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸ் நிலையம் மேற்கொண்டு வருகிறது.