அடிப்படை அனர்த்த முகாமைத்துவ பயிற்சி எண் 29 நிறைவு

அடிப்படை அனர்த்த முகாமைத்துவ பதிலளிப்பு பயிற்சி பாடநெறி எண் 29 கம்பளை இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் 2026 ஜனவரி 05 முதல் 2026 பெப்ரவரி 13 வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இப் பயிற்சியில் மொத்தம் 05 அதிகாரிகளும் 121 சிப்பாய்களும் பங்கேற்றனர். இப் பயிற்சி அவசரகால நடவடிக்கைகள் மற்றும் முகாமைத்துவத்தில் அவர்களின் அறிவு மற்றும் நடைமுறை திறன்களை மேம்படுத்தியது.

இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலைய தளபதி கேணல் டபிள்யூ.எம். சமந்த அவர்கள் நிறைவுரையாற்றினார். பாடநெறி முழுவதும் பங்கேற்பாளர்கள் காட்டிய அர்ப்பணிப்பிற்காக அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், அனர்த்த முகாமைத்துவ பணிகளில் தயார்நிலை மற்றும் தொழில்முறையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.