26th February 2026
இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிலிளவல் அதிகாரிகளுக்கான ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான தேசம் ஒருங்கிணைப்பு அலுவலகத்தால், தொற்றா நோய்களைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு சொற்பொழிவு 2026 பெப்ரவரி 25 அன்று தியதலாவ இராணுவ கல்வியற் கல்லூரி கேட்போட் கூடத்தில் நடைபெற்றது.
விழிப்புணர்வு நிகழ்வின் போது, சிரேஷ்ட மருத்துவ ஆலோசகர் பிரிகேடியர் ஏ.எஸ்.எம். விஜேவர்தன (ஓய்வு) யூஎஸ்பூ அவர்கள் “தொற்றா நோய்களைத் தடுப்பது” என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்த்தினார். சிரேஷ்ட மனநல மருத்துவர் பிரிகேடியர் ஆர்.எம்.எம். மொனராகலை யூஎஸ்பீ அவர்கள் தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை நீக்குதல் மற்றும் நேர்மறையான வாழ்க்கை முறைகளை வளர்ப்பது தொடர்பாக விரிவுரை நடாத்தினார்.
சமூக சுகாதார நிபுணர் மேஜர் பி.ஏ.எஸ்.டி. ஜோதிபால அவர்கள் தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான சுகாதார மேம்பாட்டு உத்திகள் குறித்து உரையாற்றினார். அதே நேரத்தில் உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் மேஜர் ஏ.சி.கே. உடுகம அவர்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்த அமர்வை நிகழ்த்தினார். மேலும், உடல் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் பணிநிலை சாஜன்ட் டி.எம்.ஜீ பிரியதர்ஷன அவர்கள் கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சி திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பயிலிளவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.