16th February 2026
11 வது காலாட் படைப்பிரிவு அதன் 16 வது ஆண்டு நிறைவை 2026 பெப்ரவரி 15 அன்று 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ். மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுடன் கொண்டாடியது.
படைப்பிரிவின் அனைத்து படையினரின் ஆசிர்வாதங்களை வேண்டி, மத அனுஷ்டானங்களுடன் விழா ஆரம்பமாகியது. இராணுவ மரபுகளின்படி, படைப்பிரிவு தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஒரு மரக்கன்று நடப்பட்டது.
பின்னர், படைப்பிரிவு தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன் அனைத்து நிலையினருடனான மதிய உணவிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.