இராணுவ சிறப்பம்சம்
பல்லேகலை சக்தி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ இராணுவத்தினரால் அணைப்பு
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 11 வது காலாட் படைப்பிரிவின் படையினர், 2025 நவம்பர் 5 ஆம் திகதி பல்லேகலை கைதொழில் பேட்டையிலுள்ள சக்தி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீயை உடனடியாக கட்டுப்பாட்டுகுள் கொண்டு வர நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இராணுவத்தினரின் உதவியுடன் தலவாக்கலையில் தீ அணைப்பு
2025 நவம்பர் 09 ஆம் திகதி தலவாக்கலையில் உள்ள ஒரு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கோப்பிவத்தயில் ரூ.8 மில்லியன் பெறுமதியான வல்லப்பட்டையுடன் மூவர் கைது
கோப்பிவத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவலைப்பின் போது சுமார் ரூ.8 மில்லியன் பெறுமதியான வல்லப்பட்டையுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு
இராணுவத் தலைமையகத்தின் நிதி முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் கேடிஎம்எல் சமரதிவாகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் கரந்தெனிய படையணி தலைமையகத்தில் நடைபெற்ற கௌரவ விழாவில், இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படைத் தளபதியாக 2025 நவம்பர் 07 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அம்பலாங்கொடை நகரில் ஏற்பட்ட தீ இராணுவத்தினரின் உதவியுடன் அணைப்பு
அம்பலாங்கொடை பிரதேச சபைக்குச் சொந்தமான கட்டிடத்தில் அமைந்துள்ள ஒரு மின் உபகரணக் கடையில் 2025 நவம்பர் 09 அன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்து மேலும் 12 கடைகளுக்கும் பரவியதுடன், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவு கீழ் இயங்கும் 573 வது காலாட் பிரிகேடினரால் தீவிர நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இலங்கை இராணுவ புலனாய்வுப் படையினரின் கூட்டு சுற்றிவளைப்பில் அதிகளவிலான போதைப்பொருள் மற்றும் வல்லப்பட்டை பறிமுதல்
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இரண்டு பெரிய சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக ஹெராயின் மற்றும் வல்லப்பட்டை (கைரினோப்ஸ் வல்ல) கைப்பற்றப்பட்டதுடன், சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் தென் மாகாணத்தில் 2025 நவம்பர் 6 மற்றும் 8 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்டன.
காலாட்படை பயிற்சி நிலையத்தின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு
பிரிகேடியர் எம்எல்டிஎஸ் மொல்லிகொட யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தின் 48வது தளபதியாக 2025 ஒக்டோபர் 31 அன்று சுருக்கமான நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.
பார்வை இழந்த இராணுவ வீரரால் படைக்கப்பட்ட செரண்டிப் உலக சாதனைக்கு கஜபா படையணியில் பாராட்டு
76 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு செரண்டிப் உலக சாதனை படைத்த காலாட் படை வீரரான சிப்பாய் ஆர்டபிள்யூவீ பியதிஸ்ஸ அவர்களை கௌரவிக்கும் வகையில் 2025 நவம்பர் 03, அன்று "கஜபா இல்லத்தில்" ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 35வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தனது 35வது ஆண்டு நிறைவை 2025 நவம்பர் 01 அன்று குருநாகல் படையணி தலைமையகத்தில் கொண்டாடியது.
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 22 வது ஆண்டு நிறைவு
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் தனது 22வது ஆண்டு நிறைவை 2025 அக்டோபர் 31 அன்று வெலிகந்தையில் உள்ள தலைமையக வளாகத்தில் கொண்டாடியது.