13 வது பாதுகாப்பு சேவைகள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025

13 வது பாதுகாப்பு சேவைகள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2025, இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் பங்கேற்புடன், கட்டுநாயக்க விமானப்படை உள்ளக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இலங்கை இராணுவ ஆண்கள் அணி 10 எடைப் பிரிவுகளில் 8 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கங்களை வென்று அபார வெற்றியைப் பெற்று அனைத்திலும் சாம்பியன்கியது. 56 கிலோவுக்குக் குறைவான பிரிவில் போட்டியிட்ட விஜயபாகு காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் பீ.ஏ.ஆர். பிரசன்னா, ஆண்கள் பிரிவில் சிறந்த குத்துச்சண்டை வீரராக விருது பெற்றார்.

இராணுவ மகளிர் அணி 5 எடைப் பிரிவுகளில் 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எம்.டி. தனிகா 57 கிலோவுக்கும் குறைவான பெண்கள் பிரிவில் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனை பட்டத்தை வென்றார்.

இராணுவ குத்துச்சண்டை குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் பி.கே.டபிள்யூ.டபிள்யூ.எம்.ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவப் போட்டியாளர்கள் போட்டியில் பங்கேற்றனர்.