2026-02-11

தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணி வைத்தியசாலை நிலை-2க்கான 12 வது இலங்கை இராணுவ குழு இராணுவ தளபதிக்கு மரியாதை வழங்கல்

தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணியின் நிலை-2 வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கு 2026 பெப்ரவரி 20 அன்று புறப்பட இருக்கும் 12 வது இலங்கை இராணுவ குழுவினர் 2026 பெப்ரவரி 10 அன்று வேரஹெர இராணுவ வைத்திய படையணி தலைமையக மைதானத்தில், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு, சம்பிரதாய மரியாதை அணிவகுப்பை வழங்கி படையினர் தங்கள் அமைதி காக்கும் பணிகளை முறையாக ஏற்றுக்கொண்டனர்.

கேணல் டி.ஆர்.எஸ்.ஏ. ஜயமான்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இவ் குழுவிற்கு தலைமை தாங்குவதுடன் மேஜர் எச்.பீ.டி. கல்கொடதெல்ல யூஎஸ்பீ அவர்கள் இரண்டாம் கட்டளை அதிகாரியாக பணியாற்றுவார். இக் குழுவில் 12 அதிகாரிகள் மற்றும் 50 சிப்பாய்கள் உட்பட 62 படையினர் உள்ளடங்குவர்.

இந் நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் பீ.எஸ்.சுபாத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.