2026-06-05

புதிய இராணுவ செயலாளர் கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் டப்ளியூ.எஸ் கமகே ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 57 வது இராணுவ செயலாளராக 2026 ஜூன் 04 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

சமய சம்பிரதாயங்களைத் தொடர்ந்து, புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக உத்தியோகப்பூர்வ ஆவணத்தில் அவர் கையொப்பமிட்டார்.

இவர், இலங்கை இராணுவத்தின் செயலாளராக பணியாற்றிய தற்போது மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் பி.ஜீ.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களுக்கு பதிலாக பதவியேற்றுள்ளார்.

புதிய இராணுவ செயலாளருக்கு தங்கள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக, பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.