1st April 2026
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களுக்கு 2026 மார்ச் 31 ஆம் திகதி நடைபெற்ற விழாவின் போது இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை வழங்கப்பட்டது.
வருகை தந்த அவரை, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ். ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, இலங்கை பொறியியல் படையணி படையினரால் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ஓய்வுபெறும் பதவி நிலை பிரதானி குழுப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிகழ்வில் இராணுவத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.