23rd March 2026
மேஜர் ஜெனரல் எஸ்.ஜே காரியகரவன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர், இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மார்ச் 23 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விபரம்:
மேஜர் ஜெனரல் எஸ்.ஜே காரியகரவன ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 1992 ஜூலை 27 ஆம் திகதி பாகிஸ்தான் பாதுகாப்பு கல்வியற் கல்லூரியில் பாடநெறி 05 இல் பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இணைந்தார். பாகிஸ்தான் பாதுகாப்பு கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1993 ஏப்ரல் 15 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் விஜயபாகு காலாட் படையணியில் பணியமர்த்தப்பட்டார். தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2025 ஒக்டோபர் 10 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2026 மார்ச் 26 ஆம் திகதி 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். அவர் ஓய்வு பெறும்பொழுது 57 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதியாகப் பதவி வகிக்கின்றார்.
தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும் சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் 7 வது விஜயபாகு காலாட் படையணி குழு தளபதி, 7 வது விஜயபாகு காலாட் படையணி புலனாய்வு அதிகாரி, ஆட்சேர்ப்பு பாடசாலை பயிற்றுவிப்பாளர், 7 வது விஜயபாகு காலாட் படையணி நிறைவேற்று அதிகாரி, 542 வது காலாட் பிரிகேட் பொது பணி நிலை அதிகாரி – 3 (செயற்பாடு), ஆளணி நிர்வாக பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 3, 5 வது விஜயபாகு காலாட் படையணி அதிகாரி கட்டளை, 5 வது விஜயபாகு காலாட் படையணி பதில் இரண்டாம் கட்டளை அதிகாரி, 11 வது விஜயபாகு காலாட் படையணி பதில் இரண்டாம் கட்டளை அதிகாரி, 14 வது விஜயபாகு காலாட் படையணி பதில் கட்டளை அதிகாரி, 22 வது காலாட் படைப்பிரிவு பொதுப்பணிநிலை அதிகாரி 2, 1 வது விஜயபாகு காலாட் படையணி இரண்டாம் கட்டளை அதிகாரி, ஹைட்டியில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படை குழு 10 அதிகாரி கட்டளை, 4 வது விஜயபாகு காலாட் படையணி இரண்டாம் கட்டளை அதிகாரி மற்றும் 6 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
மேலும், அவர் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக பொதுப்பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), மேற்கு பாதுகாப்பு படை தலைமையக பொதுப்பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடுகள்), 57 வது காலாட் படைப்பிரிவு பொதுப்பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடுகள்), கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), இராணுவ தலைமையக உளவியல் பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1, 12 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் கேணல் நிர்வாகம் மற்றும் விடுதி, 58 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் கேணல் பொதுப் பணிநிலை, 222 வது பிரிகேட் பதில் தளபதி, 551 வது காலாட் பிரிகேட் தளபதி, இராணுவ தலைமையகத்தின் இராணுவ இசைக்குழு மற்றும் நுண்கலை பணிப்பக பணிப்பாளர், காலாட்படை பணிப்பக பணிப்பாளர், முதலாம் படை பிரிகேடியர் பொதுப் பணிநிலை மற்றும் 57 வது காலாட் படைப்பிரிவு பிரதி தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
அவரது அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையைப் பாராட்டி, அவருக்கு ரண விக்ரம பதக்கம், ரண சூர பதக்கம் (இரண்டு முறை) மற்றும் உத்தம சேவா பதக்கம் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இளம் அதிகாரிகள் பாடநெறி, அடிப்படை குறிபார்த்துசுடல் பாடநெறி, படையலகு புலனாய்வு அதிகாரி பாடநெறி, அவசரகாலப் பணிக்கு முந்தைய பயிற்சி பாடநெறி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுமக்களுக்கான விரிவான பாதுகாப்புப் பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத பாடநெறி, படையலகு கட்டளையாளர் பாடநெறி மற்றும் படையலகு கணக்கீட்டு அதிகாரிகள் பாடநெறி உள்ளிட்ட பல தொழில்முறை இராணுவ பாடநெறிகளை சிரேஷ்ட அதிகாரி வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார். இளம் அதிகாரிகளுக்கான தந்திரோபாயப் பாடநெறி - பாகிஸ்தான், கனிஷ்ட கட்டளையாளர் பாடநெறி – இந்தியா, படையணி சமிக்ஞை அதிகாரி பாடநெறி - இந்தியா, அடிப்படை வான்வழிப் பாடநெறி – பாகிஸ்தான் மற்றும் சிரேஷ்ட கட்டளையாளர் பாடநெறி – இந்தியா உள்ளிட்ட பல வெளிநாட்டுப் பாடநெறிகளையும் பயின்றுள்ளார்.
மேலும் சிரேஷ்ட அதிகாரி இராணுவ பாடநெறிகளுக்கு மேலதிகமாக, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் போர் மற்றும் சமாதான ஆய்வுகளில் முதுகலைப் பட்டத்தையும், பண்டாரநாயக்க சர்வதேச ராஜதந்திரப் பயிற்சி நிறுவனத்தில் ராஜதந்திரம் மற்றும் உலக விவகார டிப்ளோமா, இந்தியாவின் தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட நிலை பாதுகாப்பு முகாமைத்துவ டிப்ளோமவையும் பெற்றுள்ளார்.