ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

மேஜர் ஜெனரல் கே.பீ.பீ. கருணநாயக்க அவர்கள், 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 ஏப்ரல் 07 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விபரம்:

மேஜர் ஜெனரல் கே.பீ.பீ. கருணநாயக்க அவர்கள் 1992 நவம்பர் 08 ஆம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி பாடநெறி 10 இல் இலங்கை இராணுவ நிரந்தர படையில் பயிலவளல் அதிகாரியாக இணைந்தார். ரத்மலான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1994 டிசம்பர் 16 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் கெமுனு ஹேவா படையணியில் பணியமர்த்தப்பட்டார். அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2026 ஜனவரி 03 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2026 ஏப்ரல் 22 ஆம் திகதி 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார்.

தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும் சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். அவர் 7வது கெமுனு ஹேவா படையணியின் குழு தளபதி, கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் பயிற்சிப் பிரிவின் பயிற்றுவிப்பாளர், 11 வது கெமுனு ஹேவா படையணியின் குழு தளபதி, 11 வது கெமுனு ஹேவா படையணியின் அதிகாரி கட்டளை, இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் பயிற்றுவிப்பாளர், இராணுவத் தலைமையகத்தின் செயற்பாட்டு பணிப்பகத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி 3 (செயற்பாடுகள்), 7 வது கெமுனு ஹேவா படையணியின் அதிகாரி கட்டளை, ரத்மலான இடைத்தங்கல் முகாமில் பணிநிலை அதிகாரி 2, 55 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி 2 (செயற்பாடுகள்), 19 வது கெமுனு ஹேவா படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, ஹைட்டியில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படை குழு இலங்கை படையலகின் பணிநிலை அதிகாரி, 68 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி 2 (செயற்பாடுகள்), 68 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் பதில் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயற்பாடுகள்), இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் பணிநிலை அதிகாரி 1 (நிர்வாகம்) மற்றும் 68 வது காலாட் படைப்பிரிவில் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (நிர்வாகம் மற்றும் விடுதி) ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

மேலும் தனது பணிக்காலத்தில் சிரேஷ்ட அதிகாரி, 9 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, கட்டுக்குருந்த 17 ஏ பிரிவின் தளபதி, இராணுவத் தலைமையக செயல்ற்பாட்டு பணிப்பகத்தின் பொதுக் பணிநிலை அதிகாரி 1 (பதில்), இலங்கை இராணுவ ஆட்சேர்ப்புப் பயிற்சி ஒருங்கிணைப்பு நிலையத்தின் தளபதி, 56 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் கேணல் (பொதுப் பணிநிலை), 562 வது காலாட் பிரிகேட் பதில் தளபதி, 662 வது காலாட் பிரிகேட் தளபதி, 581 வது காலாட் பிரிகேட் தளபதி, ரணவிரு சேவா அதிகார சபையின் பணிப்பாளர், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக பிரிகேடியர் (பொதுப் பணிநிலை) மற்றும் 12 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

மேலும் சிரேஷ்ட அதிகாரி, படையணி சமிக்ஞை அதிகாரி பாடநெறி, அடிப்படை குறிபார்த்து சுடல் பாடநெறி, கனிஷ்ட பணிநிலை பாடநெறி, அதிகாரிகளுக்கான படையணி கணக்காய்வு பாடநெறி, படையணி பயிற்றுவிப்பாளர் பாடநெறி, அடிப்படை பராசூட் பயிற்றுவிப்பாளர் பாடநெறி, கனிஷ்ட கட்டளை பாடநெறி, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் பயிற்றுவிப்பாளர் பயிற்சி பாடநெறி, எதிர்கால இராணுவப் மேற்பார்வையாளர் மற்றும் பணிநிலை அதிகாரிகளுக்கான பாடநெறி, பாகிஸ்தானில் இளம் அதிகாரிகளுக்கான தந்திரோபாயப் பாடநெறி, இந்தியாவில் கனிஷ்ட கட்டளை பாடநெறி மற்றும் இந்தியாவில் சிரேஷ்ட கட்டளை பாடநெறி ஆகிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை பயின்றுள்ளார்.

தனது இராணுவத் தகுதிகளுக்கு மேலாக, சிரேஷ்ட அதிகாரி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் கலை இளங்கலைப் பட்டத்தையும் (பாதுகாப்பு ஆய்வுகள்), 2014-ஆம் ஆண்டில் இலங்கை அறக்கட்டளை நடத்திய தேசிய ஆலோசனை பட்டயத்தையும் பெற்றுள்ளார்.