Newly Appointed Commander of 1 Corps Asமுதலாம் படையின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்புsumes Duties
கொமாண்டோ படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் எச்.டி.எல்.எஸ். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 2026 மே 04 ஆம் திகதி முதலாம் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது முதலாம் படையின் 10வது தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.
வருகை தந்த தளபதிக்கு 3வது கஜபா படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின்னர், அவர் முகாம் வளாகத்தில் ஒரு மரக்கன்றை நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, அவர் படையினருக்கு ஆற்றிய உரையில், தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டதோடு, எதிர்காலத்திற்கான தனது திட்டங்களையும் கோடிட்டுக் காட்டினார். புதிய தளபதி குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தன.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.