2026-06-05

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடை

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வெளிச்செல்லும் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச். பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களுக்கு 2026 ஜூன் 04 ஆம் திகதி பிரியாவிடை அளித்தனர்.

சம்பிரதாயங்களுக்கமைய, வெளிச்செல்லும் தளபதிக்கு விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

படையினருக்கு உரையாற்றிய அவர், தனது பதவிக்காலத்தில் வழங்கிய அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஈடுபாடு மற்றும் ஆதரவிற்காக அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அவர் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு, விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டதுடன், குழுப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.