2026-06-05

இராணுவத்தினரின் உதவியுடன் பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ அணைப்பு

2026 ஜூன் 03 அன்று பட்டகொடவில் உள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவம் மின்சாரக் கோளாறால் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

இலங்கை இராணுவ போர் கருவி படையணி தலைமையக படையினர் மற்றும் 21 வது சிங்க படையணி படையினர் ஹொரன தீயணைப்புப் படை மற்றும் அப்பகுதி மக்களின் கூட்டு முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அவசர மீட்பு நடவடிக்கையின் போது, முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 49 பேர், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.