29th January 2026
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 ஜனவரி 28 அன்று ராகம ரணவிரு செவன நலவிடுதிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த இராணுவத் தளபதியை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ். ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ்பீ பீஎஸ்சீ, போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.ஜே.எல்.கே.வீரகோன் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ மற்றும் ராகம ரணவிரு செவன நலவிடுதி தளபதி பிரிகேடியர் ஜீ.ஆர்.எஸ்.தர்மரத்ன யூஎஸ்பீ ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.
இந்த விஜயம் இராணுவத் தளபதிக்கும் நலவிடுதி ஆலோசகர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலுடன் ஆரம்பமாகியதுடன் இக்கலந்துரையாடலில் போர்வீரர்களுக்காக நடத்தப்படும் மறுவாழ்வு மற்றும் நலன்புரி திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. பின்னர் இராணுவ தளபதி அவர்களின் மன மற்றும் உள நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் இசை மற்றும் நாடக சிகிச்சையைப் பார்வையிட்டார்.
இந்த விஜயத்தின் போது, ராகம ரணவிரு செவன நலவிடுதியில் உள்ள போர்வீரர்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்துத் தேவைகளை எளிதாக்குவதற்காக இராணுவத் தளபதி ஒரு வாகனத்தை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட போர் வீரர்களுக்கான நலன்புரி ஆதரவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன், அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க அவர்களின் உத்தரவின் பேரில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.