இராணுவத் தளபதி புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க மிஹிந்து செத் மெதுர மற்றும் அபிமன்சல 3 ஆகியவற்றிற்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அத்திடிய மிஹிந்து செத் மெதுர மற்றும் பங்கொல்ல அபிமன்சல 3 ஆகிய இடங்களுக்கு 2026 ஏப்ரல் 03 ஆம் திகதி விஜயம் மேற்கொண்டார்.

இராணுவத் தளபதி, மாற்றுத்திறனாளி போர் வீரர்களின் நலன் விசாரித்து, அவர்களின் தேவைகளுக்கு விஷேட கவனம் செலுத்தியதோடு, அவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டு. மேலும் பரிசுப் பொதிகளை வழங்கியதுடன், தனது புத்தாண்டு வாழ்த்துகளையும் அவர்களின் விலைமதிப்பற்ற சேவைக்கான பாராட்டுகளையும் தெரிவித்தார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.