இராணுவ விளையாட்டு வீரர்களுக்காக விளையாட்டு காயங்கள் தொடர்பான பயிற்சி பட்டறை

பனாகொடை விளையாட்டு மேம்பாட்டு மற்றும் முகாமைத்துவ நிலையத்தின் கேட்போர் கூடத்தில், இராணுவ விளையாட்டு வீரர்களுக்காக விளையாட்டின்போது ஏற்படும் காயங்களைத் தடுப்பது தொடர்பான பயிற்சி பட்டறை 2026 ஜனவரி 20 அன்று நடத்தப்பட்டது.

காயம் தடுப்பு மற்றும் தடகள வீரர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன், விளையாட்டு அமைச்சின் விளையாட்டு மருத்துவ நிறுவனத்தால் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விளையாட்டு பணிப்பாளர் பிரிகேடியர் கே.ஏ.டி.சி.ஆர். கன்னங்கர, ஆர்எஸ்பீ, என்டிசீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இப் பயிற்சி பட்டறை முன்னெடுக்கப்பட்டது.