இராணுவ உடற் பயிற்சி பாடசாலையில் 2026ம் ஆண்டின் முதலாம் தவணைக்கான விடுகை அணிவகுப்பு
பனாகொடை இராணுவ உடற் பயிற்சி பாடசாலையின் 2026 ஆம் ஆண்டின் விடுகை அணிவகுப்பு 2026 ஜூன் 18 ஆம் திகதி பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக ஊடகம் மற்றும் உளவியல் செயல்பாடுகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எஸ். கமகே ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அதிகாரி உயர் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் 21, உயர் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் 51 மற்றும் உதவி உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் 136 ஆகியவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், மொத்தம் 24 அதிகாரி பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் 111 சிப்பாய் பயிற்றுவிப்பாளர்களும் தேர்ச்சி பெற்றனர்.
இந் நிகழ்வில் படையணிகளின் நிலைய தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் பெற்றோர்கள் பங்குபற்றினர்.
விழாவின் போது, அந்தந்தப் பாடப்பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அதிகாரி உயர் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் 21
சிறந்த சீருடற் பயிற்சியாளர் – கேப்டன் ஆர்.சீ.கே, ராஜகருணா – 3 வது கமாண்டே படையணி
சிறந்த தாங்குதிறன் - லெப்டினன் பி.கே.ஜி.ஜி.வீ.எம். பண்டார - 4 வது விஷேட படையணி
சிறந்த விளையாட்டு வீரர் - லெப்டினன் ஜே.எம்.சி.எம்.பி. ஜயலத் - 2 வது இயந்திரவியற் காலாட் படையணி
சிறந்த மாணவர் - லெப்டினன் பி.கே.ஜி.ஜி.வீ.எம். பண்டார - 4 வது விஷேட படையணி
உயர் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் 51
சிறந்த சீருடற் பயிற்சியாளர் – லான்ஸ் கோப்ரல் கே.டி.ஜீ.எஸ்.என். சஞ்சீவ – 2 வது விஷேட படையணி
சிறந்த தாங்குதிறன் - சிப்பாய் பி.எச்.எம்.எஸ். திவங்க – 9 வது இலங்கை சமிக்ஞை படையணி
சிறந்த விளையாட்டு வீரர் - கோப்ரல் டபிள்யூ.ஏ.எஸ்.எல். வேரகொட – 2 வது விஷேட படையணி
சிறந்த மாணவர் - சிப்பாய் பி.டி.யு. சாந்த – 7 வது இலங்கை இராணுவ சேவை படையணி
உதவி உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் 136
சிறந்த சீருடற் பயிற்சியாளர் - கோப்ரல் கே.டீ.எச். ஹன்சமல் – 3 வது விஷேட படையணி
சிறந்த தாங்குதிறன் - லான்ஸ் பொம்படியர் எஸ். சோமபால – 8 வது பீரங்கி படையணி
சிறந்த விளையாட்டு வீரர் – கோப்ரல் எல்.எஸ். பாலசூரிய - 2 வது விஷேட படையணி
சிறந்த மாணவர் – கோப்ரல் கே.டீ.எச். ஹன்சமல் – 3 வது விஷேட படையணி
சிறந்த அணி தலைவர் - லான்ஸ் கோப்ரல் ஜே.ஏ.சி.எஸ். குமார – 3 வது விஷேட படையணி