7th March 2026
இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 1999 ஒக்டோபர் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட இராணுவ கீதத்தின் இசையமைப்பாளர்களைக் கௌரவிப்பதற்காக இலங்கை இராணுவம், 2026 மார்ச் 6 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் இராணுவப் கீதத்திற்கு பங்களித்த புகழ்பெற்ற பாடகர்கள்: பாடலாசிரியர் வண. ரம்புக்கன சித்தார்த்த தேரர்; இசையமைப்பாளர் சிரேஷ்ட இசைக்கலைஞர் விக்டர் ரத்நாயக்க; மற்றும் இராணுவப் பாடலை கருத்தியல் செய்து ஒருங்கிணைத்த சிரேஷ்ட அதிகாரி மேஜர் ஜெனரல் எஸ்.டி. தென்னகோன் (ஓய்வு) ஆர்எஸ்பீ வீஎஸ்வீ என்டிசீ ஆகியோர் கலந்து கொண்டனர். இராணுவப் பாடலை உருவாக்குவதில் அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகள் விழாவின் போது சிறப்பிக்கப்பட்டன. முதன்மைப் பணிநிலை அதிகாரிகள், பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.