இலங்கை பொறியியல் படையணியினால் இந்திய இராணுவ பொறியியல் படையணி கௌரவிப்பு
2025 ஆம் ஆண்டு “தித்வா” சூறாவளியை தொடர்ந்து இந்திய இராணுவப் பொறியியல் பணிப்படைக் குழுவினர் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இலங்கை பொறியியல் படையணி 2026 மே 24 அன்று அவர்களைக் கௌரவிக்கும் பாராட்டு விழா ஒன்றை நடத்தியது.
வருகை தந்த குழுவினருக்கு இராணுவ மரியாதைகள் வழங்கப்பட்டதனை தொடர்ந்து இலங்கை இராணுவத்தின் தலைமை களப் பொறியியலாளரும் இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் சி.டி. விக்ரமநாயக்க டப்ளியூவீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களால் வரவேற்கப்பட்டனர்.
விழாவின் போது நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டதோடு இந்திய இராணுவப் பொறியியல் பணிப்படைக் குழுவின் கட்டளை அதிகாரிக்கு தலைமை களப் பொறியியலாளர் பாராட்டு கடிதத்தையும் வழங்கினார்.