இலங்கை இராணுவத்தின் புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி கடமை பொறுப்பேற்பு

இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இராணுவத்தில் மூன்றாவது மிக உயர்ந்த பதவியான இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாக 2026 ஏப்ரல் 06 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.

சமய ஆசிர்வாதங்களுக்கு மத்தியில், தனது நியமனத்தை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் உத்தியோகபூர்வ ஆவணங்களில் அவர் கையொழுத்திட்டார். இப்பதவிக்கு முன்னர் அவர், இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி உட்பட முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மைப் பணிநிலை அதிகாரிகள், பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதி இராணுவ பதவி நிலை பிரதானிக்கு தங்களது நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.