2026-06-06
இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் அடிப்படை அனர்த்த மீட்புப் பயிற்சி எண்-30 நிறைவு
கம்பொல இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தில் 2026 ஏப்ரல் 22 முதல் ஜூன் 03 வரை அடிப்படைப் அனர்த்த மீட்பு பயிற்சி எண்-30 நடாத்தப்பட்டது.
மொத்தம் 07 அதிகாரிகளும் 179 சிப்பாய்களும் இப்பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
கூட்டுச் சேவைகள் மொழிப் பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் டி.எம்.எம். திசநாயக்க ஆர்டபிளியூபீ அவர்கள் நிறைவுரையாற்றி, நிறைவு விழாவைச் சிறப்பித்தார்.
இலங்கை இராணுவ அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தின் தளபதி கேணல் டபிள்யூ.எம். சமந்த, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.