16th February 2026
அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி – 58 வெற்றிகரமாக முடிவடைந்ததுடன் சான்றிதழ் வழங்கும் விழா 14 பெப்ரவரி 2026 அன்று நடைபெற்றது.
பாடநெறியில் கலந்து கொண்டவர்களுக்கு நிறைவுரையை அம்பாறை போர் பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஏ.கே.சீ.எஸ் சில்வா ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் வழங்கினார்.
மொத்தம் 41 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் இப் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். 1வது விஷேட படையணியின் பணிநிலை சார்ஜன் ஜீ.வீ. சம்பத் குமார ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் பாடநெறியில் சிறந்த மாணவராக விருதுபெற்றார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய் பயிற்றுவிப்பாளர்கள் பங்குபற்றினர்.