31st March 2026
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 மார்ச் 31 ஆம் திகதி கம்புருபிட்டிய அபிமன்சல 2 நலவிடுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
அபிமான்சல 2 என்பது மாற்றுத்திறனாளி போர் வீரர்களுக்குப் பராமரிப்பையும் ஆதரவையும் வழங்கும் ஒரு பிரத்யேக நலவிடுதியாகும். இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி அங்கு வசிப்பவர்களுடன் கலந்துரையாடி நலம் விசாரித்தார்.