2026-05-29
71 வது தேசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் – 2026 இராணுவ வீரர்கள் பிரகாசிப்பு
தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 71வது தேசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2026, மே மாதம் குழு மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியின் இறுதிப் போட்டி 2026 மே 24 அன்று கொழும்பு 03, ஆட்டோமொபைல் ஸ்போர்ட்ஸ் கழகத்தில் நடத்தப்பட்டது.
மாவட்ட பில்லியர்ட்ஸ் போட்டி மற்றும் அகில இலங்கை பில்லியர்ட்ஸ் போட்டியில், பொறியியல் சேவைகள் படையணியின் கோப்ரல் சி.எம்.ஜி. சந்திரசேகர சாம்பியன் பட்டங்களை வென்றார்.
தேசிய பில்லியர்ட்ஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில், பொறியியல் சேவைகள் படையணியின் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எம்.எம். முபீன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.