2026-05-09

16 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் எல்.டி. பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 2026 மே 02 அன்று படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் 16 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.

வருகை தந்த படைப்பிரிவின் புதிய தளபதிக்கு 9 வது இலங்கை சிங்க படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தளபதி அனைத்து நிலையினருக்கும் உரையாற்றியதுடன், தனது எதிர்கால நோக்கு மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்தும் விளக்கிக் கூறினார்.

அனைத்துத் நிலையினருக்கான தேநீர் விருந்துடன் அன்றைய சம்பிரதாயங்கள் நிறைவடைந்து.

இந்நிகழ்வில சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.