2nd February 2026
உள்ளக கணக்காய்வு பணிப்பகம், "மூலோபாய பயிற்சி திட்டங்கள் மூலம் உள்ளக மேற்பார்வையை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு நாள் மூலோபாய திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தை 2026 ஜனவரி 22 மற்றும் 23 ம் திகதிகளில் இராணுவத் தலைமையகத்தில் நடாத்தியது.
இந்தப் பயிற்சி, இயற்றப்பட்ட புதிய கணக்காய்வு மற்றும் தொடர்புடைய சட்டங்கள், கொள்முதல் வழிகாட்டுதல்கள் 2024, பொது நிதி முகாமைத்துவம், ஆபத்து அடிப்படையிலான கணக்காய்வு முறைகளுக்கு மாறுதல் மற்றும் கணக்காய்வு தொழிலில் வளர்ந்து வரும் போக்குகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
இந்த அமர்வுகளை உள்ளக பணிப்பகத்தின் கேணல் ஆர்.எம். பாலசூரிய யூஎஸ்பீ, தலைமை உள்ளக கணக்காய்வாளர் திரு. சுமித் ஜே. குமார (சிவில்), பணிநிலை அதிகாரி I (கணக்காய்வு முகாமைத்துவம்) மேஜர் ஜி.டி.கே.ஜே. திசாநாயக்க மற்றும் பணிநிலை அதிகாரி I (கணக்காய்வு) மேஜர் ஆர்.ஏ.டி.பீ. விஜயசேன ஆகியோர் நடாத்தினர்.