ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இராணுவத் தலைமையக ஆளணி நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.ஜி.எம்.என். செனவிரத்ன யூஎஸ்பீ அவர்கள் 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 பெப்ரவரி 05, ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:

மேஜர் ஜெனரல் கே.ஜி.எம்.என். செனவிரத்ன யூஎஸ்பீ அவர்கள் 1992 நவம்பர் 08, இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி பாடநெறி 10 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார் ஜெனரல் சேர் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரி ரத்மலானை மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1994 டிசம்பர் 14 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை கவசப் வாகன படையணியில் நியமிக்கப்பட்டார்.தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2025 டிசம்பர் 15 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி, 2026 பெப்ரவரி 11 திகதி வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறும் போது இராணுவத் தலைமையக ஆளணி நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகிக்கின்றார்.

அவரது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும், சிரேஷ்ட அதிகாரி பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார். இலங்கை கவசப் வாகன படையணியின் 5வது புலனாய்வுப் பிரிவின் ஏ படையின் குழு தளபதி, மேஜர் ஜெனரல் என்.ஆர்.மரம்பே (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் உதவியாளராகவும், இலங்கை கவசப் வாகன படையணியின் 6வது (வலுவூட்டல்) படைப்பிரிவில் சார்லி பிரிவில் அதிகாரி கட்டளை, இலங்கை கவசப் வாகன படையணியின் பொது பணி நிலை அதிகாரி 2, இலங்கை கவசப் வாகன படையணியின் 8வது (வலுவூட்டல்) தலைமையகப் பிரிவில் அதிகாரி கட்டளை, இலங்கை கவசப் வாகன படையணியின் 8வது (வலுவூட்டல்) தலைமையகப் பிரிவில் இரண்டாம் கட்டளை அதிகாரி, இலங்கை கவசப் வாகன படையணியின் தலைமையகத்தின் நிறைவேற்று அதிகாரி, இலங்கை கவசப் வாகன படையணி தலைமையகத்தின் பதில் பணி நிலை அதிகாரி 1 (நிர்வாகம்) இராணுவத் தலைமையகத்தில் இராணுவச் செயலாளர் கிளையின் பணி நிலை அதிகாரி 1 (தொ), மேற்கு சஹாரா ஐக்கிய நாட்டு வாக்கெடுப்புக்கான பணியில் இராணுவக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), இலங்கை கவசப் வாகன படையணியின் 6 (வலுவூட்டல்) படையின் கட்டளை அதிகாரி, இலங்கை கவசப் வாகன படையணியின் 3 வது கவசப் படையின் கட்டளை அதிகாரி போன்றவையாகும்.

இலங்கை கவசப் வாகன படையணி நிலையத்தின் பணி நிலை அதிகாரி 1 (நிர்வாகம்), 66 வது காலாட் படைப்பிரிவின் பொதுப் பணி நிலைஅதிகாரி 1 (செயல்பாடுகள்), பல்நோக்கு முகாமைத்துவ பணிக்குழுவின் பயிற்சி பணிப்பாளர், இலங்கை கவசப் வாகன படையணியின் நிலைய தளபதி, 661 வது காலாட் பிரிகேட் தளபதி, 121 வது காலாட் பிரிகேட் தளபதி, இலங்கை கவசப் வாகன படையணியின் தலைமையகத்தின் நிலைய தளபதி, இராணுவத் தலைமையக ஆளணி நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகிக்கித்தார்.

அவரது அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையைப் பாராட்டி, அவருக்கு உத்தம சேவை பதக்கம் வழங்கப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரி பல இராணுவ தொழில்முறை பட்ட படிப்புகளை வெற்றிகரமாக முடித்துள்ளார். அவற்றில் கண்காணிப்பு மற்றும் பணி நிலை அதிகாரிகள் பாடநெறி, ஐக்கிய நாடுகளின் வழங்கல் அதிகாரிகள் பாடநெறி, மனித உரிமைகள் பயிற்றுவிப்பாளர் பயிற்சி பாடநெறி மற்றும் ஆயுத போர் சட்டம் பயிற்றுவிப்பாளர்களின் பயிற்சி பாடநெறி ஆகியவை அடங்கும்.

அவர் பல வெளிநாட்டு பட்ட படிப்புகளையும் பயின்றஞள்ளார். இந்தியா இளம் அதிகாரிகள் (கவச) பாடநெறி, இந்தியா ஆட்டோமொடிவ் பயிற்றுவிப்பாளர் பாடநெறி, பாகிஸ்தான் கனிஷ்ட பணிநிலை (நடுநிலை வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டது) பாடநெறி, இந்தியா போர் குழு தளபதிகள் பாடநெறி மற்றும் இந்தியா போர் குழு தளபதிகள் பாடநெறி ஆகியவை இதில் அடங்கும்.

இராணுவத் தகுதிகளுக்கு மேலதிகமாக, சிரேஷ்ட அதிகாரி ரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியின் இளங்கலைப் பட்டத்தையும் (பாதுகாப்பு கற்கைகள்) கொழும்பு பல்கலைக்கழகத்தில் மோதல் மற்றும் அமைதி கற்கைகளில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.