25th March 2026
மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள் 33 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ பணிக்குப் பின்னர், இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2026 மார்ச் 25 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.
மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள் 1990 செப்டம்பர் 07 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பயிலவளல் அதிகாரியாக இணைந்தார். பாகிஸ்தான் பாதுகாப்பு கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1991 மார்ச் 13 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் கொமாண்டோ படையணியில் பணியமர்த்தப்பட்டார். தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர் 2023 ஒக்டோபர் 13 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2026 ஏப்ரல் 07 ஆம் திகதி 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். அவர் ஓய்வு பெறும்பொழுது இராணுவ தலைமையகத்தில் போர் கருவி பணிப்பாளர் நாயகம் மற்றும் கொமாண்டோ படையணி படைத்தளபதியாகப் பதவி வகிக்கின்றார்.
அவரது பதவிக்காலத்தில் சிரேஷ்ட அதிகாரி 1வது கொமாண்டோ படையணி ஈ குழு கட்டளையாளர், 1வது கொமாண்டோ படையணி ஈ குழு பதில் கட்டளையாளர், 513 வது காலாட் பிரிகேட் பொதுப்பணிநிலை அதிகாரி 3, 1வது கொமாண்டோ படையணி பி குழு அதிகாரி கட்டளை, அப்போதைய வெளியுறவு அமைச்சரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, 3வது கொமாண்டோ படையணி பிரதி கட்டளையாளர், கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலை தலைமை பயிற்றுவிப்பாளர், 5 வது கொமாண்டோ படையணி அதிகாரி கட்டளை, அப்போதைய இராணுவத் தளபதியும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் ஜெ ஜயசூரிய (ஓய்வு) ஆர்டபிள்யூபீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலை தளபதி, 661 வது பிரிகேட் தளபதி, அப்போதைய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளரும், இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியுமானவரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, 61 வது மற்றும் 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, கொமாண்டோ படையணி படைத்தளபதி, முதலாம் படை தளபதி மற்றும் இராணுவ தலைமையகத்தின் போர் கருவி பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
அவரது அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையைப் பாராட்டி, அவருக்கு ரண சூர பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட அதிகாரி அடிப்படை கொமாண்டோ பாடநெறி, மேலதீக கொமாண்டோ பாடநெறி, அதிகாரிகளுக்கான மிகச்சிறந்த பயிற்சி பாடநெறி, அடிப்படை பரசூட் பயிற்சி பாடநெறி, விமானக் கடத்தல் தடுப்பு மற்றும் பணயக்கைதிகள் விடுவிப்புப் பாடநெறி மற்றும் மேலதீக பரசூட் பாடநெறி ஆகிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளையும் பயின்றுள்ளார். வெளிநாட்டுப் பாடநெறிகளில் இந்தியாவில் வழங்கப்படும் கொமாண்டோ பாடநெறி, பாகிஸ்தானில் வழங்கப்படும் இளம் அதிகாரிகளுக்கான காலாட் பாடநெறி, பாகிஸ்தானில் அதிகாரிகளுக்கான கவச எதிர்ப்புப் பாடநெறி மற்றும் பங்களாதேஷில் வழங்கப்படும் இளம் கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி ஆகியவை அடங்கும்.