27th February 2026
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2026 பெப்ரவரி 26 ஆம் திகதி இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த இராணுவத் தளபதியை, மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ மற்றும் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் அவரை மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் தளபதிக்கு படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு சதுக்கத்தில் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி படையணி தலைமையகத்தில் புதிதாக கட்டப்பட்ட தண்டனை அறை வளாகத்தைத் திறந்து வைத்தார். பின்னர் படையினருக்கு உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது, உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறியில் (பெண்) முதலிடத்தையும், உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் 135 (ஆண்/பெண்) இல் அனைத்து தகுதி வரிசையிலும் 11 வது இடத்தையும் பெற்ற இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் லான்ஸ் கோப்ரல் எஸ்.டி. மாணிக் அத்துல அவர்களுக்கு இராணுவத் தளபதி பண ஊக்கத்தொகையை வழங்கினார்.