2026-05-13
இராணுவ படையினரால் உஸ்கல சியபலங்கமுவ குளக்கட்டு வலுப்படுத்தல்
571 வது காலாட் பிரிகேடின் கீழ் உள்ள 16 வது கஜபா படையணி படையினரால் 2026 மே 11 அன்று மீகலாவ கல்கமுவ வடக்கில் அமைந்துள்ள உஸ்கல சியபலங்கமுவ குளக்கட்டில் மணல் மூட்டைகளை அடுக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
குளக்கரையை வலுப்படுத்தவும், அப்பகுதியில் உள்ள பிரதேசவாசிகள் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அணையின் மீது மொத்தம் 900 மணல் மூட்டைகளை அடுக்கி இராணுவ வீரர்கள் இப்பணியை நிறைவு செய்தனர்.
இந்நிகழ்ச்சியின்போது நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளும், பிரதேச உழவர் சங்கங்களின் உறுப்பினர்களும் உடனிருந்தனர்.