12th February 2026
பாகிஸ்தான் இராணுவ குழுச் செயற்பாடு – 2026 போட்டியில் இலங்கை இராணுவம் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்ததுடன் சர்வதேச இராணுவ ஈடுபாடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
19 வெளிநாட்டு நட்பு நாடுகளின் அணிகள் உட்பட 24 அணிகளுடன் போட்டியிட்ட இலங்கை அணி, கடினமான போட்டி முழுவதும் உடற் சகிப்புத்தன்மை, தந்திரோபாய சிறப்பம்சம் மற்றும் சிறந்த இராணுவத் திறன்களை வெளிப்படுத்தியது.
இந்தப் போட்டி பங்கேற்பாளர்களை கடுமையாக சோதித்துடன் உடற் சகிப்புத்தன்மை, சுறுசுறுப்பு மற்றும் மன விழிப்புணர்வு ஆகியவற்றின் மிக உயர்ந்த தரத்திற்கு அவர்களை தள்ளியது. பாகிஸ்தான் இராணுவ குழுச் செயற்பாடு வரலாற்றில் இரண்டாவது முறையாக, இலங்கை இராணுவ அணி தங்கப் பதக்கத்தை வென்றதுடன் கடந்த ஆண்டு வெள்ளிப் பதக்கத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அவர்களின் கடந்த கால செயல்திறனைக் கருத்தில் கொண்டால் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.