31st March 2026
இலங்கை பொறியியல் படையணியின் 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி படையணி 24 மார்ச் 2026 அன்று கொழும்பு சங்கிரி-லா ஹோட்டல் வளாகத்தில் அதன் முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்காக விரிவான பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.
இத்திட்டத்தின் மூலம் விரிவுரைகள் மற்றும் செயல்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, நவீன பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஹோட்டல் ஊழியர்களின் விழிப்புணர்வும் பதிலளிக்கும் திறன்களும் மேம்படுத்தப்பட்டன.