யாழ்ப்பாணத்தில் வீட்டுநிர்மாணங்களுக்கு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள்

1st September 2017

சாலியவெவ இராணுவ தொழில் பயிற்சி மத்திய நிலையத்தினால் (CAVT) யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினால் வீட்டு நிர்மான பணிகளை மேற்கொண்ட இராணுவத்திளர் 116 பேருக்கு தம்புள்ள கட்டுமான எகடமியில் இம்மாத (24)ஆம் திகதி அவர்களது சேவைகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இராணுவ தளபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.

இந் நிகழ்வு தம்புள்ள ஞானம் கட்டிட பயிற்சி நிலையத்தில் ஓய்வு பெற் மேஜர் ஜெனரல் கே.எம் உதயந்த விஜேரத்ன நிர்வாக இயக்குநர் டோக்கியோ சிமென்ட் கம்பனியின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு இராணுவ தொழில் பயிற்சி நிலையத்தின் பிரிகேடியர் ஹத்னஹொட, தொடர்பாடல் அதிகாரி மவூலி குணரத்ன, ஏ.வை.எஸ் ஞானம எகடமியின் ஆர்.ஜி அர்னோலிஸ், எச்.எம். ஜயதிஸ்ஸ பண்டார, ஜானக சரத் ரணராஜா, என்.சி.பி எலபொல கலந்து கொண்டனர்.

|