ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு வீட்டு திருத்தல் வேலைபாடு வசதிகள்
3rd June 2017
கடந்த காலங்களில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து சிறந்து விளங்கி பல வெற்றிக் கிண்ணங்களை தட்டிச் சென்று இராணுவம் மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்த்த இராணுவ கெமுனு ஹெவா படையணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அந்தியதெனிய அளவ்வ பிரதேசத்தினைச் சேர்ந்த இராணுவ அதிகாரியான லெப்டினன் கேணல் டபில்யியூ விமலதாஸ அவர்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேற்படி இராணுவ அதிகாரியானவர் ஆசிய போட்டிகளில் கலந்து கொண்டு தங்க மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளதுடன் ஆசிய தெஹெரனில் இடம் பெற்ற ஓட்ட போட்டியில் 400 மீற்றர் ஓட்டம் மற்றும் 100 மீற்றர் 1.5 நிமிடங்களில் ஓடி முடித்த சாதனையினை நிலைநாட்டியதுடன் தங்கப் பதக்கத்தினையும் வென்றுள்ளார்.
மேலும் மேற்படி இராணுவ அதிகாரி தமக்கு சொந்தமான வீட்டின் திருத்தல் வேலைப் பாடுகளுக்கென கமுனு ஹெவா படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் உபுல் விதானகே அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோலிற்கிணங்க இப் படைத் தளபதி இராணுவ சிவில் ஒருங்கிணைப்பு குழுவினரின் ஒத்துளைப்புடன் மேற்படி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு 4.5 இலட்சம் ருபா செலவில் இவ் அதிகாரியின் வீட்டிற்கான சில திருத்தல் வேலைப்பாடுகளை 4ஆவது கெமுனு ஹெவா படையணியினர் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு திருத்தல் வேலைப்பாடுகள் நிறைவடைந்த நிலையில் இவ் வீட்டின் சாவிக் கொத்தானது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு கடந்த புதன் கிழமையன்று (31) மேஜர் ஜெனரல் உபுல் விதானகேஇ பிரிகேடியர் எச் என் ஹலன்கொட, கெமுனு ஹெவா படையின் தளபதி மற்றும் ரணவிரு அப்பரலின் கட்டளை அதிகாரி போன்றௌரின் தலைமையில் வழங்கப்பட்டது.
|