2023-02-23 20:31:22
இராணுவத் தலைமையகத்தில் உள்ள இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்ட ‘விரு சிசு பிரதீபா’ புலமைப்பரிசில் திட்டத்தின் கட்டம் இரண்டின் கீழ் மறைந்த மற்றும் காயமடைந்த போர்வீரர்களின் குடும்பங்களின் மாணவர்களுக்கு கல்வி நிவாரணம் வழங்கும் நோக்கில் வியாழக்கிழமை (பெப்ரவரி 23) தலா ரூ. 25,000 பெறுமதியான மேலும் 100 புலமைப்பரிசில்களை இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது வழங்கப்பட்டது.
2023-02-23 12:19:17
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் தலைமையில் இலங்கை சமிக்ஞைப் படையணியினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டமிடப்பட்ட 'தொழில்நுட்பக் கருத்தரங்குகள்' தொடரின் முதலாவது கருத்தரங்கு இன்று (பெப்ரவரி 22) காலை இராணுவத் தலைமையகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது...
2023-02-21 14:28:01
இராணுவத்தின் குதிரைப்படை வீரர்களின் தனித்துவமான விளையாட்டுத் திறமைகளை அங்கீகரித்து பாராட்டும் வகையில் இலங்கை கவச வாகன படையணி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘வர்ண இரவு’ திங்கட்கிழமை (20) மாலை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கலந்து கொண்டார்.
2023-02-18 14:03:40
சர்வதேச இராணுவ தினத்தினை முன்னிட்டு சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டப்போட்டி சனிக்கிழமை (18) கொழும்பு விமானப்படை மைதானத்தில் ஆரம்பமானது. இப் போட்டியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன(ஓய்வு) தலைமையில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, இராணு,கடற்படை,விமானப்படை தளபதிகள் மற்றும் முப்படை சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட 300 க்கும் மேற்பட்ட முப்படைஉறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
2023-02-11 07:41:10
ஐந்து நாள் விஜயத்தை மேற் கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தானின் கூட்டுப் படைகளின் குழு தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா அவர்கள் வெள்ளிக்கிழமை (10) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்தார்.
2023-02-04 11:56:16
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கௌரவ பிரதமர் மற்றும் சர்வமத தலைவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சர்கள், பாதுகாப்பு, அரச மற்றும் சிவில் முக்கியஸ்தர்கள் மற்றும் அழைப்பாளர்கள் இன்று (பெப்ரவரி 4) காலை காலி முகத்திடலில் 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வின் போது தாய் நாட்டிற்கு மரியாதை செலுத்தினர். செழிப்பு, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் தேடலில் முன்னோக்கிச் செல்வதற்கான அனைத்து இலங்கையர்களின் உறுதியான அர்ப்பணிப்பு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தப்பட்டது.
2023-02-01 23:06:11
75 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 25 ஆண்டுகளுக்கு மேலாக விசுவாசம், சேவை, ஒழுக்கத்துடன் இராணுவத்தில் சேவையாற்றிய மொத்தம் 53 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், 17 கடற்படை...
2023-02-01 23:06:11
75 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 25 ஆண்டுகளுக்கு மேலாக விசுவாசம், சேவை, ஒழுக்கத்துடன் இராணுவத்தில் சேவையாற்றிய மொத்தம் 53 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், 17 கடற்படை அதிகாரிகள் மற்றும் 7 விமானப்படை அதிகாரிகளுக்கு கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் முப்படைகளின் சேனாதிபதியும் அதிமேதகு ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க...
2023-01-25 18:32:58
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்களுக்காக தெட்கு சூடான் தரம் – 2 வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கான இலங்கை இராணுவ வைத்திய படையின் சிறிமெட் 9 வது குழு புறப்படுவதற்குச் முன்னர் புதன்கிழமை (25) வெரஹெரவில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ படையணி தலைமையக மைதானத்தில் அமைப்பின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
2023-01-21 10:22:27
2007 ஆம் ஆண்டு இயந்திரவியற் காலாட் படையணியாக மாற்றியமைக்கப்பட்ட 4 வது கஜபா படையணி சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது இராணுவ தளபதியம் கஜபா படையணி படை தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும்லியனகே அவர்களால் 4 வது கஜபா படையணி கொடி வழங்கலுடன் மீள் உருவாக்கப்பட்டது.