2026-05-07
பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் கடமை பொறுப்பேற்பு
இலங்கை இராணுவ மருத்துவப் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் பீ.எஸ். சுபாத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சி அவர்கள் 2026 மே 06 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 51வது பொதுப்பணி பணிப்பாளர் நாயகமாக இராணுவத் தலைமையகத்தின் பொதுப்பணி பணிப்பாளர் பணிப்பகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் அவர்கள் தனது புதிய பதவியை முறைப்படி ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் அடையாளப்பூர்வமாகக் கையெழுத்திட்டார்.
இவ் விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.