Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th February 2024 18:01:44 Hours

வாடிச்சாலயில் ஆதரவற்ற குடும்பத்திற்கு புதிய வீடு

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்கள் 25 பெப்ரவரி 2024 அன்று கதுருவெல வாடிச்சாலவில் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு புதிய வீடொன்றிற்கான அடிக்கல்லை நாட்டினார்.

7 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் 7 வது இலங்கை பீரங்கி படையணி படையினர் நிதியுதவியாளர்களின் தாராளமான நிதியுதவியுடன் திட்டத்திற்கு மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவர்.

இந் நிகழ்வில் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி, 231 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏஏடிபீ குலதிலக்க யூஎஸ்பீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள்,சிப்பாய்கள்,பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.