27th February 2024 17:50:17 Hours
ஓய்வுபெறும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் டிஏ அமரசேகர யூஎஸ்பீ அவர்களுக்கு 22 பெப்ரவரி 2024 பிரியாவிடை வழங்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் டிஏ அமரசேகர யூஎஸ்பீ அவர்களை நிலைய தளபதி கேணல் டிஏ.சிறிமான்னகே அவர்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
மாலையில், இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையக அதிகாரிகள் உணவகத்தில் வழக்கமான இரவு உணவு விருந்து இடம்பெற்றது. ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் டிஏ அமரசேகர யூஎஸ்பீ அவர்களுக்கு பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ அவர்களால் நினைவு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அவர்களது மனைவிமார் கலந்து கொண்டனர்.