Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th February 2024 18:23:31 Hours

யாழ். தளபதி பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் முன்னர் தடைசெய்யப்பட்ட கோவில்களை திறப்பதை மேற்பார்வையிடல்

2024 பெப்ரவரி 26 ம் திகதி பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஏழு கோவில்களுக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் தனது பணியாளர்களுடன் விஜயம் செய்தார். முன்பு தடைசெய்யப்பட்ட இந்தக் கோவில்கள் 2024 பெப்ரவரி 24 ம் திகதி பொதுமக்களுக்கு வழிப்பட அனுமதிக்கப்பட்டது.

இந்த பயணத்தின் போது யாழ். தளபதி, பிள்ளையார்கோவில், சக்திவேல்முருகன்கோவில்,ராஜேஸ்வரிகோவில்,நாகதம்பிரான்கோவில், சிவன்கோவில், ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில், நாக கோவில், மணன்பீர் பிள்ளையார்கோவில் ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்தார்.

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளுடன் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.