Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th February 2024 12:13:20 Hours

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளர்களுக்கு வன்னி பாதுகாப்பு படையினர் இரத்த தானம்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை (பெப்ரவரி 22) அன்று வன்னி பாதுகாப்புப் படை இராணுவ வைத்தியசாலையில் இடம்பெற்றது.

நிகழ்ச்சியின் போது, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 103 இராணுவ வீரர்கள் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்தனர். இந்த முயற்சி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் ஊழியர்களுடன் இணைந்து வன்னி இராணுவ வைத்தியசாலை இணைந்து நிகழ்விற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.