Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th February 2024 15:22:51 Hours

56 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியின் முதல் விஜயம்

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் 2024 பெப்ரவரி 17 முதல் 18 வரை கட்டளையின் கீழ் உள்ள 563 வது காலாட் பிரிகேட் மற்றும் அதன் படையலகுகளுக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் 563 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் அந்தந்த படையலகு கட்டளை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

விஜயம் முழுவதும் அந்தந்தப் பிரிகேட் மற்றும் படையலகுகளின் பங்கு, பணிகள் மற்றும் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்த விரிவான விளக்கங்களை, அந்தந்த தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளின் தலைமையில் படைப்பிரிவு தளபதிக்கு வழங்கப்பட்டது. இவ் விஜயத்தின் போது தளபதி ஒவ்வொரு இடத்திலும் படையினருக்கு உரையாற்றினார்.

பிரதி படைப்பிரிவு தளபதி, பிரிகேட் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.