22nd February 2024 11:33:46 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம் 2024 பெப்ரவரி 22 ஆம் திகதி ஹப்புத்தளை மற்றும் கஹகொல்ல ஜும்மா பள்ளிவால்களுக்கு பேரிச்சம்பழங்களை வழங்கியது. எதிர்வரும் நோன்பு மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் சமூகத்திற்கு உதவியளிக்கும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பில்அனுசரனையாளர் ஒருவரினால் ஒவ்வொரு பள்ளிவாசல்களுக்கும் 20 கிலோ பேரிச்சம்பழங்கள் வழங்கப்பட்டன. மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் தனிப்பட்ட முறையில் ஜும்மா பள்ளிவாசல்களுக்கு சென்று இந்த நன்கொடையினை வழங்கினார்.