Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd February 2024 17:41:57 Hours

இந்திய உதவி பாதுகாப்பு ஆலோசகர் மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதியை சந்திப்பு

கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி எஸ்எம் அவர்கள் திங்கட்கிழமை (பெப்ரவரி 19) மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி எஸ்எம் அவர்களை அன்புடன் வரவேற்றார். மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் பாதுகாப்பு, சமூக மேம்பாடு மற்றும் சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, பங்கு பற்றிய விடயங்களை கலந்துரையாடினர்.

இறுதியில் நினைவுசின்னங்கள் பரிமாற்றப்பட்டதுடன் நிகழ்வு நிறைவடைந்தது. உதவி பாதுகாப்பு ஆலோசகர் புறப்படுவதற்கு முன்னர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் பதிவிட்டார்.