Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2024 12:52:28 Hours

மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால அவர்களுக்கு மனிதஉரிமை தலைமைத்துவத்திற்கான உலகளாவிய அங்கீகாரம்

நிதி முகாமை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க "உலக மனிதஉரிமை தலைமைத்துவ விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது உலக மனித வள மேம்பாட்டு காங்கிரஸின் 32 வது பதிப்பின் போது, இந்தியா மும்பையில் 15 பெப்ரவரி 2024 அன்று நடைபெற்ற "உலக மனிதஉரிமை தலைமைத்துவ விருது" வழங்கும் நிகழ்வில் வழங்கப்பட்டது.

உலக மனித உரிமை மேம்பாட்டு காங்கிரஸின் நடுவர் பேரவை மற்றும் ஆலோசனை சபையினால் வழங்கப்படும் இந்த விருது, மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் விதிவிலக்கான சேவை மற்றும் சர்வதேச அளவில் மனித உரிமை மேம்பாடு மற்றும் தலைமைத்துவ திறன்களுக்கான பங்களிப்பை அங்கீகரிக்கிறது. 126 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் பல்வேறு துறைகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.

நான்காவது முறையாக இந்த விருதைப் பெற்ற மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு தேசிய பாதுகாப்பு நிர்வாகத்தில் அவரது குறிப்பிடத்தக்க திறமைகளை வெளிக்காட்டுகின்றது. இது கல்விச் சிறப்பு, மனித உரிமை மேம்பாடு மற்றும் தலைமைத்துவம், என்பவற்றில் உலக அரங்கில் தனக்கு மட்டுமன்றி இலங்கைக்கும் இலங்கை இராணுவத்திற்கும் கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் சேர்த்துள்ளது.