Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th February 2024 15:33:42 Hours

இராணுவ நீர் விளையாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் படையணிகளுக்கு இடையிலான நீச்சல் போட்டி

4 வது படையணிகளுக்கு இடையிலான 2-மைல் திறந்த நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 16) கல்கிசை கடற்கரையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்கள் கலந்து கொண்டார்.

இலங்கை இராணுவ நீர் விளையாட்டுக் குழுவின் தலைவரும் ஒழுக்க பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்ஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 17 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 258 நீச்சல் வீரர்களின் பங்குபற்றுதலுடன் இலங்கை இராணுவ நீர் விளையாட்டுக் குழுவினால் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதம அதிதியான இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஹோட்டல் கல்கிசை வதிவிட முகாமையாளர் திருமதி திலோமி நாணயக்கர ஆகியோர் வெற்றியாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

ஒரு கால் இழந்த போர் வீரரான இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பணிநிலை சார்ஜன் பீபீ அஜித் குமார அவர்கள் தனது திறமைகளை சிறப்பாக நிறைவு செய்து பாராட்டுக்களைப் பெற்றார்.

இலங்கை இராணுவ நீர் விளையாட்டுக் குழுவின் தலைவர் நன்றியுரை ஆற்றியதுடன் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி அவர்களின் வருகையினை பராட்டி சிறப்பு நினைவு சின்னத்தையும் வழங்கினார். இந்நிகழ்வின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.

விருதுகளின் விபரங்கள் பின்வருமாறு:

ஆண்கள் குழு போட்டி இராண்டாமிடம் - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

பெண்கள் குழு இராண்டாமிடம் - 1 வது இலங்கை இராணுவ மகளீர் படையணி

அதிக மொத்த புள்ளிகள் சவால் கிண்ணம் (ஆண்கள்) - இலங்கை சிங்க படையணி

அதிக மொத்த புள்ளிகள் சவால் கிண்ணம் (பெண்கள்) - 1 வது இலங்கை இராணுவ மகளீர் படையணி

சிறந்த நீச்சல் வீரர் (ஆண்) – சிப்பாய் ஆர்ஜீஏ கருணாநாயக்க - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி

சிறந்த நீச்சல் வீராங்கணை– சிப்பாய் ஏஎம்பீபீ சாந்தி - 3 வது இலங்கை இராணுவ மகளீர் படையணி

ஒட்டுமொத்த சாம்பியன் - கஜபா படையணி மற்றும் இலங்கை இராணுவ பொலீஸ் படையணி